போலீஸ் நண்பர் குழுவினருக்கு பயிற்சி முகாம் துவக்கம்
பதிவு செய்த நேரம்:2012-08-11 10:01:42
நாமக்கல், : நாமக்கல்லில் மாவட்ட காவல்துறை சார்பில், காவலர் நண்பர்கள் பயிற்சி முகாம் துவங்கியது. இந்த முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட எஸ்.பி. கண்ணம்மாள் பேசியதாவது:
போலீசாருக்கும் -பொதுமக்களுக்கும் பாலமாக போலீஸ் நண்பர்கள் குழுவினர் செயல்படவேண்டும். அந்தந்த பகுதியில் நடைபெறும் பிரச்னைகள் பற்றி அறிந்து அதை போலீசாருக்கு நண்பர்கள் குழுவினர் தெரிவிக்க வேண்டும். இக்குழுவினர் சமுதாய பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் அதன் மூலம் குற்றங்களை வெகுவாக குறைக்கமுடியும்.
இவ்வாறு எஸ்.பி. கண்ணம்மாள் பேசினார்.
முகாமில் ஏடிஎஸ்பி சுப்புலெட்சுமி, காவலர்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சினேகா, செபஸ்டியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்டத்தில் உள்ள 200 போலீசார் மற்றும் 200 போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெறுகிறது.