பதிவு செய்த நேரம்:2012-10-09 11:01:32
திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு 3 நாள் பயிற்சி முகாமை திருச்சி மாவ ட்ட எஸ்பி நேற்று துவக்கி வைத்தார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம், மணப்பாறை, லால்குடி, முசிறி, திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற போலீஸ் நண்பர் கள் குழு (ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்) ஏற்படுத்தப்பட்டது. இதில் 650க்கும் மேற்பட்ட போலீஸ் நண்பர்கள் குழு வினர் போலீசாருடன் இணை ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு ஊடக பயிற்சி உள்பட 5 பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று துவங்கிய பயிற்சி முகாமை எஸ்பி லலிதாலட்சுமி துவக்கி வைத்து பேசினார். முதற்கட்டமாக ஜீயபுரம் மற்றும் திருவெறும்பூரை சேர்ந்த போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட் டது. பயிற்சி முகாமில், போலீசாருடன் இணைந்து ரோந்து பணி செல்வது, பொதுமக்களிடம் எவ்வாறு பேசி அணுகுவது, நடத்தை விதிமுறைகள் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை சென்னை காவல் துறை நண்பர்கள் பல்வகை ஊடக பயிற்சி மைய குழுவை சேர்ந்த சினேகா, செபாஸ்டின் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து இன்று லால்குடி, முசிறி பகுதியை சேர்ந்த போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.