" மோசடி நிதி நிறுவனம் நடத்துவோர், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, "நோட்டீஸ்' களில், அரசு சின்னத்தை அச்சடித்து, கொடுத்து வருகின்றனர். இதை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம்,'' என, பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரதீப் வி. பிலிப் கேட்டு கொண்டுள்ளார்.
நிதி நிறுவனங்கள் மோசடி குறித்து, ஏ.டி.ஜி.பி., பிரதீப் வி. பிலிப், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு: போலி நிதி நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட் துறையின் கீழ் செயல்படும், நிறுவன பதிவாளரிடம் பதிவு செய்யாமல், பொது மக்களை கவரும் வகையில், "நோட்டீஸ்' களில், தமிழக அரசின் சின்னத்தை, பயன்படுத்துகின்றனர். பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், அரசு வங்கி, எல்.ஐ.சி அலுவலகம் அருகே நடத்துகின்றனர். முறையான நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படி, 12. 5 சதவீத வட்டி மட்டுமே வழங்க முடியும். ஆனால் இவர்களோ, ஒரே ஆண்டில், செலுத்திய தொகையை விட, 2 மடங்கு கூடுதல் தொகை தருகிறோம் என, பொய் வாக்குறுதிகள் தருகின்றனர். இவர்களது விளம்பர போர்டு முறையாக இருக்காது. வாய்மொழி உத்தரவாதங்களே அதிகம் இருக்கும். பதிவாளர், வருமான வரித்துறையிடம் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்வது இல்லை. இப்படிபட்ட நிதி நிறுவனங்களில், பொது மக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்,'' என, குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment