பதிவு செய்த நேரம்:2012-11-09 12:24:3
தொண்டி, : தொண்டி காவல் நிலையத்தில் திருவாடானை டிஎஸ்பி மோகன்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனபாலன் முன்னிலையில் போலீஸ் நண்பர் குழு கூட்டம் நடைபெற்றது. தேவர் குருபூஜையின்போது நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து மாவட்டத்தில் பதற்றம் நீடிப்பதால் தொண்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக இககூட்டம் நடைபெற்றது. போலீஸ் பற்றாக்குறையை போக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதியான புதிய பஸ் ஸ்டாண்ட், பாவோடி மைதானம், பழைய பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் போலீஸ் நண்பர்கள் குழு மற்றும் ஊர்காவல்படையினரின் உதவியோடு பாதுகாப்பை பலப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
URL - http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=117884&cat=504
No comments:
Post a Comment