தினமலர் – ச, 17 நவ., 2012
ஓசூர்: வாலிபர்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி விடக்கூடாது,என ஏ.டி.ஜி.பி.,(குற்றப்பிரிவு) பிரதீப் பிலிப் தெரிவித்தார்.
ஓசூரில், தமிழ்நாடு காவல்துறை மற்றும் போலீஸ் நண்பர்கள் சார்பில், 20ம் ஆண்டு போலீஸ் நண்பர்கள் குழு ஆண்டு விழா நடந்தது. எஸ்.பி., அசோக்குமார் தலைமை வகித்தார். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேதுமாதவன் வரவேற்றார். தேன்கனிக்கோட்டை ஏ.எஸ்.பி., விஜயகுமார், ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார், ஹோஸ்டியா தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.டி.ஜி.பி.,(குற்றப் பிரிவு) பிரதீப் பிலிப் பேசியதாவது:
போலீஸ் நண்பர்கள் குழுவினர், போலீஸாருக்கு உதவியாக செயல்படுகின்றனர். மீட்பு பணிகளில் தன்னார்வத்துடன் வந்து உதவி செய்கின்றனர். நண்பர்கள் குழுவினர் போலீஸாருடன் இணைந்து பணிபுரிவதால் சமுதாயத்தில் அவர்களுக்கு மதிப்பும், மரியதையும் உயர்கிறது.
போதை ஒழிப்பு மையங்கள் மூலம் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது தடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாக இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி விட கூடாது. அதை தடுக்க போலீஸ் நண்பர்கள் குழுவினர் விழிப்புடனும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
இன்ஸ்பெக்டர்கள் சரவணன் (ஹட்கோ), சித்ராதேவி(டவுன்) மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், போலீஸ் நண்பர் குழுவினர் கலந்து கொண்டனர்.
URL - http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%8F-%E0%AE%9F-230500887.html
No comments:
Post a Comment