திருவள்ளூர்
First Published : 24 December 2012 12:30 AM IST
காவல்துறையினருக்கு போலீஸ் நண்பர்கள் குழு உதவியாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரூபேஷ்குமார் மீனா வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ்-நண்பர்கள் குழு பயிற்சி முகாமின் நிறைவு விழா மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு போலீஸ்-நண்பர்கள் குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுஇரவு நேர ரோந்து, கடமைகள், பணிவிதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாம் நிறைவு விழாவில் ஆயுதப்படை டி.எஸ்.பி. தம்பிராஜ் வரவேற்றார். பயிற்சி பெற்றோருக்கு சான்றுகளை வழங்கி எஸ்.பி. ரூபேஷ்குமார் பேசியது: போலீஸ் நண்பர்கள் குழுவினர் காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இரவு நேர ரோந்தின்போது போலீஸôருடன் உடன் செல்ல வேண்டும். தங்கள் பகுதிகளில் சந்தேகப்படும்படி நடமாடுவோர் குறித்து அருகே உள்ள காவல்நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். சமூகவிரோத செயல்கள் நடைபெற்றால் உடனே தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நிகழாமல் தடுக்கலாம் என்றார் அவர். ஆயுதப்படை ஆய்வாளர் ராஜபிரகாசம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment