பதிவு செய்த நேரம்:2012-11-09 10:16:31
கோவை,: சமீபத்தில் மரணம் அடைந்த துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் நினைவாக ஏழை தொழிலாளிக்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது மகன் தீனலிங்கேஸ்வரன் (25). மெக்கானிக் தொழிலாளி.
சமீபத்தில் இவர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தொடும் என டாக்டர்கள் கூறிவிட்டன ர். ஏழை குடும்பமாக இருப்பதால் நிதி திரட்ட முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையறிந்த கோவை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் நிதியுதவி செய்ய முன்வந்தனர். சமீபத்தில் மரணம் அடைந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் நினைவாக ரூ.25 ஆயிரம் மருத்துவ நிதியுதவியை நேற்று வழங்கினர். இந்த தொகையை ஹேமா கருணாகரனின் கணவரும், கோவை மாவட்ட கலெக்டருமான கருணாகரன், தீனலிங்கேஸ்வரன் தாய் நாகஜோதியிடம் வழங்கினார்.
அப்போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், கிருஷ்ணன், சரண்யா, விஜயலட்சுமி, சுகுமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
URL - http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=117480&cat=504
No comments:
Post a Comment