Monday 27 August 2012

போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு 3 நாள் பல்வகை ஊடகப் பயிற்சி



போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு 3 நாள் பல்வகை ஊடகப் பயிற்சி

பதிவு செய்த நேரம்:2012-08-06 09:40:22
தர்மபுரி, : தர்மபுரியில் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு பல்வகை ஊடகப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
தர்மபுரி ஆயுதப்படை சமுதாயக் கூடத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவிற்கு 3 நாள் பல்வகை ஊடகப் பயிற்சி நேற்று துவங்கியது. இப்பயிற்சியில் போலீசார் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்களிடம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் ஒன்றாக இணைந்து சமூக அமைதியை கையாள்வது, போலீசாருக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வது, குற்றச் சம்பவங்கள் நடைபெறு வதற்கு முன் தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவது, பொதுமக்கள் மற்றும் போலீசுக்கு இடையே பாலமாக இருந்து வலிமையான உறவை ஏற்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
மேலும் சமூக சேவை, சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவுதல், போக்குவரத்து சீரமைப்பு, உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க பயனுள்ள தகவல்களை தருதல் என்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.  அது மட்டுமின்றி போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கான தனிப்பட்ட தகுதிகள் எவை என எடுத்து கூறப்பட்டது.
முக்கியமாக காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கு வருதல், சட்டத்திற்கு புறம்பான செயல்கள், பிரச்னைகளில் சம்பந்தப் பட்டிருத்தல், அதிகாரிகளை விமர்சனம் செய்தல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தங்களது பதவியை தவறாக பயன்படுத்துதல், வசூலில் ஈடுபடுதல் ஆகியவை செய்யத்தகாத செயல்கள் என எடுத்துரைக்கப்பட்டது.
இதில், துணை காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வரா, போலீஸ் நண்பர்கள் குழுவின் சென்னை பயிற்றுனர்கள் ஜபஸ்டீன் பால்ராஜ், சினேகா பெர்னான்டஸ், தர்மபுரி ஒருங்கிணைப்பளார் முரளி உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சியளித்தனர். தர்மபுரி உட்கோட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., உள்ளிட்ட 50 போலீசார் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த 51 பேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment