Thursday 27 December 2012

பாதுகாப்பான தீபாவளி பயணத்திற்கு ரயில்களில் ஏற்பாடு: ஐ.ஜி. தகவல்





தினமலர் – வி, 8 நவ., 2012

சென்னை:பயணிகள் பாதுகாப்பான தீபாவளி பயணத்தை மேற்கொள்ளும் வகையில், ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என, ரயில்வே ஐ.ஜி., ஆறுமுகம் தெரிவித்தார்.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து, ரயில்வே ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது:தீபாவளியையொட்டி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், கோவை உட்பட, முக்கிய நிலையங்கள் அனைத்திலும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ஒவ்வொன்றிலும்துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் உட்பட, மொத்தம் நான்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இத்துடன், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரலில், 50 பேரும், எழும்பூரில், 30 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்களில், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும் பயணிகள், பாதுகாப்பு கோரினால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். ரயில் பாதைகளில் நாசவேலைகளில் ஈடுபட்டாலோ, ரயில்களில் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் நடந்த கொண்டாலோ, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ரயில்வே போலீஸ் உதவி மையத்தின் மொபைல் போனில் - 99625 00500 பயணிகள் அழைத்தால், தாமதமின்றி இணைப்பு கிடைக்கும் வகையில்,120 லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், தீபாவளியையொட்டி கூடுதல்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலுக்கும், இரண்டு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீசார்பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், திருநங்கைகளால் தொந்தரவு ஏற்பட்டால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க,போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, ஐ.ஜி., ஆறுமுகம் கூறினார்.



URL - http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AF%8D-163800550.html

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழு சேவை சிறப்பாக உள்ளது போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பேச்சு


திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவின் சேவை சிறப்பாக உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டடு முத்தரசி கூறினார்.
பயிற்சி நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் காவ லர் மற்றும் காவல் நண்பர் களுக்கான பன்முனை பயிற்சி முகாம் நிறைவு விழா நடை பெற்றது. போலீஸ்துணை சூப்பிரண்டு குமரவேல் வர வேற்றார். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
சிறப்பாக உள்ளது
விழாவில் திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கலந்து கொண்டு போலீஸ் நண்பர் கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்  மற்றும் சீருடைகள் வழங்கி பேசினார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறையினருடன் இணைந்து இரவு ரோந்துபணி, தகவல் தரும்பணி, திருவிழா நேரங் களில் பாதுகாப்பு பணி மற்றும் மிக முக்கியமான பணிகளை போலீஸ் நண்பர்கள் குழுவி னர் செய்யும் போது எந்த ஒரு பிரதிபலனும் இன்றி சிறப்பாக சேவை பணியாற்றி வருகி றார்கள். இவர்களை காவல் துறை சார்பாக பாரட்டுகி றேன் என்றார்.
விழாவில் முதுநிலை பயிற்சி யாளர்கள் உமா மகேஸ்வரி, ஜான்ஜோசப்,  திருவண்ணா மலை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி, போலீஸ் நண்பர்களு குழு ஒருங்கிணைப்பாளர்கள் தியாகு, மேகராஜ்,  மதன்குமார், அன்பரசு, வந்தவாசி ஒருங்கி ணைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட துணை ஒருங்கி ணைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.




Monday 24 December 2012

காவல்துறைக்கு போலீஸ்-நண்பர்கள் குழு உதவியாக இருக்க வேண்டும்


Saturday 22 December 2012

துணை கமிஷனர் ஹேமா நினைவாக ஏழை தொழிலாளிக்கு மருத்துவ நிதியுதவி



பதிவு செய்த நேரம்:2012-11-09 10:16:31

கோவை,: சமீபத்தில் மரணம் அடைந்த துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் நினைவாக ஏழை தொழிலாளிக்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது மகன் தீனலிங்கேஸ்வரன் (25). மெக்கானிக் தொழிலாளி. 
சமீபத்தில் இவர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தொடும் என டாக்டர்கள் கூறிவிட்டன ர். ஏழை குடும்பமாக இருப்பதால் நிதி திரட்ட முடியாமல் சிரமப்பட்டனர். 
இதையறிந்த கோவை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் நிதியுதவி செய்ய முன்வந்தனர். சமீபத்தில் மரணம் அடைந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் நினைவாக ரூ.25 ஆயிரம் மருத்துவ நிதியுதவியை நேற்று வழங்கினர். இந்த தொகையை ஹேமா கருணாகரனின் கணவரும், கோவை மாவட்ட கலெக்டருமான கருணாகரன், தீனலிங்கேஸ்வரன் தாய் நாகஜோதியிடம் வழங்கினார்.
அப்போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், கிருஷ்ணன், சரண்யா, விஜயலட்சுமி, சுகுமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.



URL - http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=117480&cat=504


பாளையில் போலீஸ் நண்பர்கள் குழு அமைப்பினர் ஆலோசனை




சனி 15, டிசம்பர் 2012 5:52:27 PM 

பாளையங்கோட்டையில் போலீஸ் நண்பர்கள் குழு கூட்டம் நடந்தது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் போலீஸ் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டு பெருமாள்புரம் காவல் நிலையத்தில் முதல் கூட்டம் நடந்தது. 

உதவி கமிஷனர் ராஜமன்னார் கூட்டத்திற்கு தலைமை வகிக்க, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.இதில் மாநகராட்சி கவுன்சிலர் டேனியல் ஆபிரகாம், நிர்வாகிகள் மற்றும் டாக்டர் பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது  மின்தடை நேரத்தில் நடக்கும் வழிப்பறி சம்பவங்களை தடுத்திட  கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என போலீஸ் நண்பர்கள் குழு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.