Thursday 27 December 2012

பாதுகாப்பான தீபாவளி பயணத்திற்கு ரயில்களில் ஏற்பாடு: ஐ.ஜி. தகவல்





தினமலர் – வி, 8 நவ., 2012

சென்னை:பயணிகள் பாதுகாப்பான தீபாவளி பயணத்தை மேற்கொள்ளும் வகையில், ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என, ரயில்வே ஐ.ஜி., ஆறுமுகம் தெரிவித்தார்.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து, ரயில்வே ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது:தீபாவளியையொட்டி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், கோவை உட்பட, முக்கிய நிலையங்கள் அனைத்திலும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ஒவ்வொன்றிலும்துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் உட்பட, மொத்தம் நான்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இத்துடன், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரலில், 50 பேரும், எழும்பூரில், 30 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்களில், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும் பயணிகள், பாதுகாப்பு கோரினால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். ரயில் பாதைகளில் நாசவேலைகளில் ஈடுபட்டாலோ, ரயில்களில் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் நடந்த கொண்டாலோ, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ரயில்வே போலீஸ் உதவி மையத்தின் மொபைல் போனில் - 99625 00500 பயணிகள் அழைத்தால், தாமதமின்றி இணைப்பு கிடைக்கும் வகையில்,120 லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், தீபாவளியையொட்டி கூடுதல்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலுக்கும், இரண்டு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீசார்பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், திருநங்கைகளால் தொந்தரவு ஏற்பட்டால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க,போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, ஐ.ஜி., ஆறுமுகம் கூறினார்.



URL - http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AF%8D-163800550.html

No comments:

Post a Comment